Thursday, April 26, 2018

ஒன்பது வயது மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியை - வவுனியாவில் சம்பவம்!

  Yarl       Thursday, April 26, 2018



வவுனியாவில் மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியை மாணவன் வைத்தியசாலையில்
இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது

வவுனியா குடியிருப்பு கித்துள் வீதியில் சைவப்பிரகாசா பாடசாலையின் முன்னால் ஆசிரியையும் தற்பொழுது பிரிதொரு பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவரின் இல்லத்தில் குறித்த ஆசிரியை மாணவர்கட்கு தனிப்பட்ட ரீதியில் தனியார் கல்வி நிலையம் ஒன்றை நடாத்தி வருகிறார்

குறித்த கல்வி நிலையத்தில் கல்வி பயிலும் ஒன்பது வயதுடைய தரம் நான்கில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக கல்வி நிலையத்திற்கு சமூகம் தராதமையையடுத்து நேற்றைய தினம் (24.04.2018) குறித்த மாணவனை குறிப்பிட்ட ஆசிரியை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்

ஆசிரியை தாக்கியதில் மாணவனின் மூக்காலும் காதாலும் இரத்த கசிவு ஏற்பட்டதுடன் மாணவனின் கன்னம் கண்டல் காயத்துக்குள்ளாகி மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதுடன் பெற்றோரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது என பெற்றோர் தெரிவித்துள்ளனர்

குறித்த ஆசிரியை கடந்த காலங்களிலும் மாணவர்களை கடுமையாக தாக்குகிறார் என்ற குற்றச்சாட்டும் மக்கள் மத்தியில் நிலவிவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இவர் வவுனியாவின் தேசிய பாடசாலை ஒன்றின் முன்னால் அதிபரின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது
logoblog

#hashtag

Thanks for reading ஒன்பது வயது மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியை - வவுனியாவில் சம்பவம்!

No comments:
Previous
« Prev Post