Thursday, April 26, 2018

ஸ்ரீதர் தியேட்டரை மீட்டு தர கோரியும் இ 100 மில்லியன் நஷ்டஈடு கோரியும் டக்ளஸ்க்கு எதிராக வழக்கு!

  Yarl       Thursday, April 26, 2018



யாழ் நகரின் மத்தியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கும் ஸ்ரீதர் திரையரங்கின் கட்டடத்தின் உரித்தை மீளப் பெற்றுத் தருமாறு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுதாரர்களாக இரட்ணசபாபதி ஸ்ரீதர் உள்ளிட்ட 6 பேர் மனுதாரர்களாகவும்இ ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவை எதிர்மனு தாரராகவும் குறிப்பிட்டு சட்டத்தரணி கேசவன் சயந்தன் குறித்த மனுவை நேற்றைய தினம் புதன் கிழமை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 1996ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையைப் பயன்படுத்தி அனுமதி எதுவுமின்றி சட்டவிரோதமாக குடியேறிய எதிர்மனுதாரர் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை எதையுமே வழங்காமல் ஆதனத்தையும் கட்டடத்தையும் வைத்துள்ளார்.

இதன் காரணமாக உரிமையாளர்களாகிய எமக்கு மாதம் ஒன்றுக்கு 75 ஆயிரம் ரூபா வீதம் ஏற்பட்ட இழப்பும் அதன் வட்டியையும் இணைத்து இதுவரை காலத்துக்குமான இழப்பீடாக 100 மில்லியன் ரூபாவையும் எதிர் மனுதாரர் வழங்கவேண்டும்.

அத்துடன் தற்போது இடம்பெறும் வழக்குச் செலவுடன் கட்டடத்துடன் கூடிய ஆனத்தின் உரித்தினையும் பெற்றுத் தரவேண்டும்இ என மனுதாரர்கள் கேட்டுள்ளனர்.
logoblog

#hashtag

Thanks for reading ஸ்ரீதர் தியேட்டரை மீட்டு தர கோரியும் இ 100 மில்லியன் நஷ்டஈடு கோரியும் டக்ளஸ்க்கு எதிராக வழக்கு!

No comments:
Previous
« Prev Post