Wednesday, March 21, 2018

த.தே.கூ வின் சத்தியப்பிரமாணம்

  Editor       Wednesday, March 21, 2018
யாழ்ப்பாணம் கிளிநோச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் வடமாகாண அவைத் தலைவரும் தமிழரசுக் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

இதன் போது கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா,ஈ.சரவணபவன்,செல்வம் அடைக்கலநாதன்,தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்டவர்கள் மற்றும் மாகாண சபையின் உறுப்பினர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள், தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





logoblog

#hashtag

Thanks for reading த.தே.கூ வின் சத்தியப்பிரமாணம்

No comments:
Previous
« Prev Post