Monday, May 7, 2018

யாழில் இருவர் மீது கொடூர வாள்வெட்டு!

  Yarl       Monday, May 7, 2018

யாழ்ப்பாணம் - நீர்வேலியில் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரவித்தனர்.

நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியில் வைத்து இன்று (7)  மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

அதே இடத்தைச் சேர்ந்த அப்புத்துரை கிரிசி (வயது -23) என்ற இளைஞன் கழுத்தில் வெட்டுப்பட்ட நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, சத்திரசிகிச்சை முன்னெடுக்கப்படுகிறது என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

அதே இடத்தைச் சேர்ந்த கிரிகேசன் (வயது -23) காலில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
பொலிஸாரல் தேடப்பட்டுவரும் ஆவா குழுவின் முக்கியஸ்தர் வினோத் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பலே இந்த வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டது என பொலிஸார் கூறினர்.

4 மோட்டார் சைக்களில் சென்று இருவர் மீதும் சாரமாரியாக வாளால் வெட்டியுள்ளனர். அண்மையில், வாள் வெட்டுக்கு இலக்கான நபர் ஆவாக் குழுவைச் சேர்ந்த ஒருவரை தகாத வார்த்தையால் பேசியதாகவும், அந்த கோபத்தின் நிமித்தம், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


logoblog

#hashtag

Thanks for reading யாழில் இருவர் மீது கொடூர வாள்வெட்டு!

No comments:
Previous
« Prev Post