Friday, May 4, 2018

பொலிஸாருக்கு இடமாற்றம்!!

  Editor       Friday, May 4, 2018
பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 17 பேருக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.



பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் சேவையின் தேவை நிமித்தம் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அரச தலைவர் பாதுகாப்பு பிரிவு, பயங்கரவாத விசாரணைப்பிரிவு, நலன்புரி பிரிவு மற்றும் மட்டக்களப்பு, கேகாலை, மாத்தறை, கந்தளாய், அம்பாறை, வவுனியா, மாத்தளை, களணி, ஹற்றன், அநுராதபுரம், காலி, பாணந்துறை ஆகிய பிரிவுகளில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
logoblog

#hashtag

Thanks for reading பொலிஸாருக்கு இடமாற்றம்!!

No comments:
Previous
« Prev Post