Saturday, May 5, 2018

யாழ், முல்லைத்தீவில் நாளை மின்தடை!

  Yarl       Saturday, May 5, 2018



மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(06) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் பிற்பகல்-06 மணி வரை யாழ்.குடாநாட்டில் கோண்டாவில் குமரக் கோட்டம், பூதவராஜ்ர் வீதி, அன்னங்கை, கொடிகாமம் கச்சாய் வீதிப் பிரதேசம், உயகதிர்காமம், வல்லிபுரம், வல்லிபுரம் நீர்ப்பாசனம் ஆகிய பகுதிகளிலும்,

காலை-08 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகரம், கள்ளப்பாடு, வண்ணாங்குளம், வட்டுவாகல், கூல்மென் ஐஸ் தொழிற்சாலை, உன்னாப்பிலவு, முல்லைத்தீவு அரசாங்க அதிபர் அலுவலகம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
logoblog

#hashtag

Thanks for reading யாழ், முல்லைத்தீவில் நாளை மின்தடை!

No comments:
Previous
« Prev Post