Wednesday, May 16, 2018

இன்றைய ராசிபலன் 16-05-2018

  Yarl       Wednesday, May 16, 2018

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உற்சாகமான நாள்.


ரிஷபம்:  ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. இடம் பொருள் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.




மிதுனம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல், வீண் செலவுகள் வந்துப் போகும். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.




கடகம்:  சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.




சிம்மம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.




கன்னி: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். கைமாற் றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மனசாட்சி படி செயல்படும் நாள்.




துலாம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.




விருச்சிகம்: பிள்ளைகள் கேட்டதை வாங்கி தருவீர்கள். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.  வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். நன்மை கிட்டும் நாள்.




தனுசு: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.




மகரம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.




கும்பம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.




மீனம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.
logoblog

#hashtag

Thanks for reading இன்றைய ராசிபலன் 16-05-2018

No comments:
Previous
« Prev Post