Sunday, May 13, 2018

இன்றைய ராசிபலன் 13-05-2018

  Yarl       Sunday, May 13, 2018

மேஷம்: நண்பகல் 12.17மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். உங்கள் வாயை சிலர் கிளறி வேடிக்கைப் பார்ப்பார்கள். அதிகம் பேச வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.




ரிஷபம்: பல வேலைகள் தடைப்பட்டு முடியும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பா ர்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.




மிதுனம்: யதார்த்தமாகப் பேசிக்கவர்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். மதிப்புக்கூடும் நாள்.




கடகம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.




சிம்மம்: நண்பகல் 12.17 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள். 




கன்னி: நண்பகல் 12.17 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். முன்கோபத்தால் பகை உண்டாகும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். நாவடக்கம் தேவைப்படும் நாள். 




துலாம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதரங்களால் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.


விருச்சிகம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடிவரும். அமோகமான நாள்.




தனுசு: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.




மகரம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு க்கூர்ந்து மகிழ்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.




கும்பம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.



மீனம்: நண்பகல் 12.17 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துச் செல்லும். பிற்பகல் முதல் குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
logoblog

#hashtag

Thanks for reading இன்றைய ராசிபலன் 13-05-2018

No comments:
Previous
« Prev Post