Saturday, April 21, 2018

தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தின் மஹோற்சவம் ஆரம்பம்!

  Yarl       Saturday, April 21, 2018



மட்டக்களப்பு, தேற்றாத்தீவு அருள்மிகு ஸ்ரீ கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமாகிவுள்ளது.

குறித்த ஆலயத்தின் மஹோற்சவம் நேற்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன் மஹோற்சவம் பத்து தினங்கள் நடைபெறும்.

மேலும் இந்நாட்களில் தினமும் மாலை விசேட யாகாரம்பம், மூலமூர்த்தி அலங்காரபூஜை, தம்ப பூஜை, வசந்த மண்டப அலங்கார பூஜை, சுவாமி உள்வீதி வெளி வீதி வருதல் ஆகியனவும் நடைபெறும்.

நேற்று ஆரம்பமான மகோற்சவம் எதிர்வரும் 29 ஆம் திகதி தீர்த்த உற்சவம் மற்றும் திருபொன்னூஞ்சல் ஆகியவை இடம்பெற்று கொடியிறக்கத்துடன் நிறைவுபெறும்.






























logoblog

#hashtag

Thanks for reading தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தின் மஹோற்சவம் ஆரம்பம்!

No comments:
Previous
« Prev Post