Thursday, April 19, 2018

பொதுமக்களிடம் சிக்கிய திருடனுக்கு தர்மஅடி!!

  Editor       Thursday, April 19, 2018
வீடுகளில் கொள்ளையடிக்கும் கும்பலைச் சேர்ந்த ஒருவர் பொதுமக்களிடம் சிக்கியதில் பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே இடம்பெற்றுள்ளது.



வடகீரனூர் கிராமத்தில் தொடர்ந்து 6 வீடுகளில் திருட்டு நடந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கொள்ளையில் ஈடுபட முயன்ற ஒருவரை பொதுமக்கள் சேர்ந்து துரத்திப் பிடித்து, தர்ம அடி கொடுத்து மின் கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர்.

அதன்பின்னர் பொன்பரப்பி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடமிருந்து திருடனை மீட்டனர்.

விசாரணையில் அவன் நைனார் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அழகர் என்பது தெரியவந்ததுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணையினை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
logoblog

#hashtag

Thanks for reading பொதுமக்களிடம் சிக்கிய திருடனுக்கு தர்மஅடி!!

No comments:
Previous
« Prev Post