Thursday, April 19, 2018

கொழும்பு வெள்ளவத்தையில் கோர விபத்து!! இளைஞன் மரணம்!!

  Editor       Thursday, April 19, 2018
கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்களில் பயணித்த இளைஞனே இந்த கோர விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட தனியார் பேரூந்தின் பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மோதுண்டமையால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.



மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பேரூந்தின் பின்பக்க சில்லுக்குள் சிக்கிய நிலையில் பலத்த காயங்களுடன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துடன் தொடர்புடைய தனியார் பேரூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
logoblog

#hashtag

Thanks for reading கொழும்பு வெள்ளவத்தையில் கோர விபத்து!! இளைஞன் மரணம்!!

No comments:
Previous
« Prev Post