Sunday, April 22, 2018

குளிக்கச் சென்ற வயோதிபர் பரிதாபமாக மரணம்

  Editor       Sunday, April 22, 2018
லிந்துலை - மெரேயா கேம்பிரி தோட்டத்தில் நீரோடையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கேம்பிரி கீழ் பிரிவு தோட்டத்தை சேர்ந்த 65 வயதுடைய கிச்சான் என்பவரின் சடலமே இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலையில் தனது குடியிருப்பு பகுதிக்கு அருகிலுள்ள நீரோடையில் குளிக்கச் சென்றபோதே தவறி விழுந்து மரணமாகி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மரண பரிசோதகர் சடலத்தை பார்வையிட்ட பின்னர் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பி வைக்க உள்ளதாகவும் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

குளிக்கச் சென்ற வயோதிபர் பரிதாபமாக மரணம்
logoblog

#hashtag

Thanks for reading குளிக்கச் சென்ற வயோதிபர் பரிதாபமாக மரணம்

No comments:
Previous
« Prev Post