Tuesday, April 24, 2018

நிர்வாணமாக நடிக்க கணவர் அனுமதி; சர்வீன் சாவ்லா

  Editor       Tuesday, April 24, 2018
பிரபல இந்தி நடிகை சர்வீன் சாவ்லா தமிழில் மூன்று பேர் மூன்று காதல், ஜெய் ஹிந்த் -2 ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.

இவர் கடந்த 2015ல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். டிசம்பர் 2017-ல் தான் அவரது கணவர் பற்றி வெளியில் கூறியுள்ளார். மூன்று வருடங்களாக திருமணம் நடந்ததை அவர் மறைத்து வந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



எந்த மொழி நடிகைகளாக இருந்தாலும் திருமணத்துக்குப் பின்பு பெரும்பாலும் படங்களில் நடிப்பதை நிறுத்தி விடுவார்கள். கணவர் வீட்டு குடும்பத்துடன் ஐக்கியமாகிவிடுவார்கள். ஆனால் நடிகை சர்வீன் சாவ்லா மட்டும் கொஞ்சம் வித்யாசமாக இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் என்று கூறி உள்ளார்.

நடிகை சாவ்லா, கேப்டவுனில் தனது கணவர் அக்ஷய்தக்கருடன் தற்போது விடுமுறையை கழித்து வருகிறார். தனது திருமணம் குறித்து பிரபல ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தனது திருமண வாழ்க்கை அழகாக இருக்கிறது” என்று கூறினார்.

மேலும் அவர் கூறும் போது :-

எனது கணவர் தனது தொழில்முறை விருப்பங்களை ஆதரிக்கிறார். நான் என்னுடன் நடிக்கும் சக நடிகரை கிஸ் செய்தாலும். ஏன் நிர்வாணமாக நடித்தாலும்கூட என் கணவர் எதுவும் சொல்லமாட்டார். அந்தளவுக்கு அவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். அவர் என்னை புரிந்து வைத்து உள்ளார். அதனால் தான் அவரை திருமணம் செய்துகொண்டேன்” என நடிகை சர்வீன் சாவ்லா கூறியுள்ளார்.
logoblog

#hashtag

Thanks for reading நிர்வாணமாக நடிக்க கணவர் அனுமதி; சர்வீன் சாவ்லா

No comments:
Previous
« Prev Post