Monday, April 30, 2018

இலங்கை அரசால் கடந்த இரண்டு மாதத்தில் அச்சிடப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

  Editor       Monday, April 30, 2018
இலங்கை அரசினால் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் மாத்திரம் 10 பில்லியன் ரூபா நாணயத் தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



அமெரிக்க டொலர் 160 ரூபாவை விடவும் அதிகரிக்க பிரதான காரணம் அரசாங்கத்தின் இவ்வாறு பணம் அச்சிடும் நடவடிக்கைதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் செலவீனம் மற்றும் அரச ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவுகள் என்பவற்றுக்காக இவ்வாறு பணம் அச்சிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், எதிர்வரும் நாட்களில் இதன்காரணமாக டொலரின் பெறுமானம் இன்னும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும், சர்வதேச நாணய நிதியம் அரசுக்கு வழங்கவுள்ள அடுத்த கட்ட கடன் உதவி மற்றும் ஹம்பாந்தோட்ட துறைமுக குத்தகையின் மீதிப் பணம் என்பவற்றை வழங்கவுள்ளதன் காரணமாக, குறுகிய காலப்பகுதிக்கு இந்த பண வீக்கம் கட்டுப்படுத்தப்படலாம் எனவும் பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
logoblog

#hashtag

Thanks for reading இலங்கை அரசால் கடந்த இரண்டு மாதத்தில் அச்சிடப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

No comments:
Previous
« Prev Post