Monday, April 30, 2018

நடன ஆசிரியை மீது வீடு புகுந்து வாள்வெட்டு ! கொக்குவிலில் பயங்கரம்

  Editor       Monday, April 30, 2018
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாளவெட்டுக் கும்பல் அங்கு வசித்த நடன ஆசிரியையும் அவரது தாயாரையும் வாளால் வெட்டிக் காயப்படுத்தினர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


இந்தச் சம்பவம் கொக்குவில் மூன்றாம் கண்டம் பகுதியில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்றது.



மோட்டார் சைக்கிள்களில் வந்து வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்கல், ஆசிரியையின் கூந்தலை பிடித்து வெட்டி கொடுமைப்படுத்தியதுடன், அவை வாளால் வெட்டிக் காயப்படுத்தியது.

அதனைத் தடுக்கச் சென்ற ஆசிரியையின் தாயாரையும் கும்பல் வாளால் வெட்டிக்காயப்படுத்தியதுவிட்டு தப்பிச் சென்றது.

இருவரும் அயலவர்களின் உதவியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நடன ஆசிரியை கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட தருமபுரம் பாடசாலையில் பணியாற்றுகிறார். பாடசாலை விடுமுறை நாளான இன்று வாள்வெட்டுக் கும்பல் பட்டப்பகலில் வீடு புகுந்து இந்த அட்டூழியத்தை செய்துள்ளது.
logoblog

#hashtag

Thanks for reading நடன ஆசிரியை மீது வீடு புகுந்து வாள்வெட்டு ! கொக்குவிலில் பயங்கரம்

No comments:
Previous
« Prev Post