Thursday, April 26, 2018

விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் வெடிபொருட்களை திருடியவருக்கு நேர்ந்த கதி!!

  Editor       Thursday, April 26, 2018

 அண்மையில் படையினரால் விடுவிக்கப்பட்ட யாழ். வலிகாமம் வடக்கு பகுதியில்காணப்பட்ட வெடிபொருள்களை சேகரித்து செல்ல முற்பட்ட ஒருவர் காங்கேசன்துறைபொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ். வலிகாமம் வடக்கு வள்ளுவபுரம் பகுதியில் வைத்தே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து மிகவும் அபாயகரமான சுமார் பத்து கிலோகிராம் வெடி மருந்தையும் பொலிசார் மீட்டுள்ளனர்.

யாழ். குருநகர் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.படையினரின் பயன்பாட்டிலிருந்து குறித்த பகுதி கடந்த வாரம்விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வெடிபொருட்கள் படையினரால் தவறுதலாகவிட்டு செல்லப்பட்டிருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.இவ்வாறு வெடிபொருட்கள் கிடப்பதை அவதானித்த குறித்த நபர், இரகசியமான முறையில்குறித்த அபாயகரமான வெடி பொருளை சேதப்படுத்தி அதிலிருந்த வெடி பொருட்களை சேகரித்துள்ளதுடன், அதை வேறு பகுதிக்கு எடுத்து செல்ல முற்பட்ட போது பொலிசாரால்கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை பொலிசார்மேற்கொண்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட நபரை நாளைய தினம் மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
logoblog

#hashtag

Thanks for reading விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் வெடிபொருட்களை திருடியவருக்கு நேர்ந்த கதி!!

No comments:
Previous
« Prev Post