Thursday, April 19, 2018

இணையத்தில் மகளின் பாலியல் வன்கொடுமை வீடியோ: அதிர்ச்சியில் பெற்றோர்!

  Editor       Thursday, April 19, 2018
தனது மகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட வீடியோவை இணையத்தில் பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.



டெல்லியின் மங்கோல்பூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை வீட்டிற்கு அருகில் வசிக்கும் 32 வயது மதிக்கத்தக்க ஒருவர், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அப்போது அங்கிருந்த குறித்த நபரின் நண்பர்கள், இதுகுறித்து வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு வெளியில் கூறினால் இணையத்தில் பதிவேற்றம் செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

மிரட்டலுக்குப் பயந்து சிறுமி இதுகுறித்து பெற்றோர்களிடம் கூறாமலே இருந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான ஒருவர் தற்செயலாக இணையத்தை பார்க்கும் போது அதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருந்த சம்பவம் வீடியோ காணப்பட்டுள்ளது.

அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக இதுகுறித்து சிறுமியின் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

பெற்றோரும் அதனை பார்த்து உறுதிசெய்த பின்பு மகளிடம் இது குறித்து கேட்டுள்ளனர்.

அதன்பிறகே நடந்த அனைத்தையும் சிறுமி ஒன்று விடாமல் கூறியுள்ளார்.

இதனையடுத்து, பெற்றோர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
logoblog

#hashtag

Thanks for reading இணையத்தில் மகளின் பாலியல் வன்கொடுமை வீடியோ: அதிர்ச்சியில் பெற்றோர்!

No comments:
Previous
« Prev Post