Thursday, April 26, 2018

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

  Yarl       Thursday, April 26, 2018



கிளிநொச்சி, நல்லூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

பூநகரி பிரதேசத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது தேசிய லொத்தர் சபைக்குச் சொந்தமான வாகனம் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பூநகரி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


logoblog

#hashtag

Thanks for reading கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

No comments:
Previous
« Prev Post