Tuesday, April 24, 2018

துல்கர் சல்மானுடன் அந்த 4 பேரு யாரு?

  Editor       Tuesday, April 24, 2018
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், என்று சொன்னது போய்,

தனக்கென திரைத்துறையில் ஒரு தனியிடம் பிடித்துள்ளார். தமிழில் 'வாயை மூடி பேசவும் படம் மூலம் அறிமுகம் ஆனார். அவரின் குழைந்தை போன்ற சிரிப்புக்கு தமிழில் ரசிகைகள் அதிகம்.



மணிரத்னம் இயக்கத்தில் ஓ காதல் கண்மணி நடித்த பின்பு திரைத்துறையில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை அமைத்து கொண்டார். தற்போது மீண்டும் தமிழ் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். படத்தின் பெயர் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' இப்படம் குறித்து இயக்குநர் தேசிங் பெரியசாமி பேசுகையில் , '' இது ஒரு பயணம் சார்ந்த காதல் கதை. எல்லா தரப்பட்ட எமோஷன்களும் இக்கதையில் உள்ளன. 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' காதலையும் ரொமான்ஸையும் ஒரே வரியில் வர்ணிக்க இந்த பெயர் பொருத்தமானது. என்றார்.



மேலும் இந்த படத்தில் துல்கர் சாமானுக்கு 4 ஹீரோயின்கள் ஜோடியாக நடிக்கவுள்ளனர். அதில் நிவேதா பெத்துராஜ், ஷாலினி பாண்டே என 2 ஹீரோயின்கள் மட்டும் இப்போதைக்கு ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும் 2 ஹீரோயின்களுக்கான தேர்வு நடக்கிறது. இந்த படத்தை மலையாளத்திலும் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

logoblog

#hashtag

Thanks for reading துல்கர் சல்மானுடன் அந்த 4 பேரு யாரு?

No comments:
Previous
« Prev Post