Saturday, April 28, 2018

இன்றைய ராசிபலன் 28-04-2018

  Editor       Saturday, April 28, 2018
மேஷம்: புதிதாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்ப்புகள் மறையும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டு வருவார்கள். வியாபாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

ரிஷபம்: சகோதரர்களால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமையுடன் இருப்பது நல்லது. பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மிதுனம்: காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனத்துடன் ஈடுபடவும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளைத் தொடங்குவது சாதகமாக முடியும். உடல்நலனில் கவனம் தேவை. தாயின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கமுடியாது. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிரபலங்களின் அறிமுகமும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.

கடகம்: தாய்வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். இளைய சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

சிம்மம்: புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். தேவையற்ற செலவுகள் ஏற்படும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். அலுவலகத்தில் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கன்னி: புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்பு ஏற்படக்கூடும். நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணையுடன் உறவினர் வீடுகளுக்குச் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும்.

துலாம்: காரியங்களில் பொறுமை தேவை. எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவும் நேரிடும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறு சலசலப்பு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும்.

விருச்சிகம்: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை இன்று கிடைக்கும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

தனுசு: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதால், உற்சாகமாக இருப்பீர்கள். சகோதரர்களால் நன்மை உண்டாகும்.நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய முயற்சிகளில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும். அலுவலகப் பணியின் காரணமாக பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.

மகரம்: உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். ஆனால், மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பேசச்சில் நிதானம் தேவை. மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்: இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. உறவினர்கள் வருகையால் வீட்டில் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் நேரத்துக்கு சாப்பிடக்கூட முடியாதபடி பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குலதெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு உண்டாகும்.

மீனம்: தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். கணவன் - மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படு வீர்கள்.சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பணியாளர்களால் செலவுகளும் ஏற்படக்கூடும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியம் மகிழ்ச்சி தருவதாக முடியும்.


logoblog

#hashtag

Thanks for reading இன்றைய ராசிபலன் 28-04-2018

No comments:
Previous
« Prev Post