Sunday, April 22, 2018

இன்றைய ராசிபலன் 22-04-2018

  Editor       Sunday, April 22, 2018
மேஷம்: மனதில் தைரியமும் உற்சாகமும் பெருக்கெடுக்கும். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதுடன் லாபமும் அதிகரிக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்: இன்றைக்கு புதிய முயற்சி எதுவும் மேற்கொள்ளவேண்டாம். மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு பிள்ளைகளால் தர்ம சங்கடமான நிலைமை ஏற்படக் கூடும். வியாபாரம் எதிர்பார்த்தபடி இருக்காது. பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

மிதுனம்: உற்சாகமான நாள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூரில் உள்ள கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் சிலருக்குக் கிடைக்கும். வெளியூர்களுக்குப் பயணம் மேற்கொள்ள நேர்ந்தால், கைப் பொருள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கடகம்: எதிர்பார்த்த பணம் வந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். புதிய முயற்சி எதையும் மேற்கொள்ளவேண்டாம். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் செலவுகள் அதிகரிப்பதால் மனதில் சஞ்சலம் ஏற்படக்கூடும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

சிம்மம்: உங்கள் மனதில் உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக்கொள்வார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படக்கூடும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

கன்னி: புதிய முயற்சி சாதகமாக முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். உங்கள் முயற்சிக்கு சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு வீண் அலைச்சலும், செலவுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் ஆதாயம் கிடைக்கும்.

துலாம்: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உடல்நலனில் கவனம் தேவை. கணவன் - மனைவிக்கிடையே வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நவீன டிசைனில் ஆடைகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.

விருச்சிகம்: இன்று எந்த விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய முயற்சியைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் தேவை. வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு: மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்கள் உதவி கேட்டு வருவார்கள். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

மகரம்: உடல் ஆரோக்கியம் மேம்படும். முக்கியப் பிரமுகர்களின் தொடர்பும், அதனால் அனுகூலமும் உண்டாகும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக் கூடும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். லாபமும் அதிகரிக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

கும்பம்: சகோதரர்களின் ஆதரவு உற்சாகம் தரும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு திடீர்ப் பயணம் ஒன்றை மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலும் செலவுகளும் ஏற்படக்கூடும்.

மீனம்: காரியங்களில் தடை, தாமதம் உண்டாகும். உடல் நலனில் கவனம் தேவை. புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் சக வியாபாரிகளின் போட்டிகளைச் சமாளிக்கவேண்டி வரும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாள்களாக எதிர்பார்த்த சுபச்செய்தி வந்து சேரும்.

logoblog

#hashtag

Thanks for reading இன்றைய ராசிபலன் 22-04-2018

No comments:
Previous
« Prev Post