Saturday, March 17, 2018

மட்டக்களப்பில் வாள்வெட்டு தாக்குதல்; ஒருவர் படுகாயம்

  Editor       Saturday, March 17, 2018

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள குமாரபுரம் பகுதியில் குழு ஒன்றின் வாள்வெட்டுக்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று (16) மாலை இடம்பெற்றதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குமாரபுரம், குமாரகோவில் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய சுரேந்திரன் என்பவர் தனது வீட்டை நோக்கி நேற்று மாலை 5.30 மணிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வீதியில் அவரை வழிமறித்த குழுவினர் அவர் மீது வாளால் வெட்டியுள்ளார்.

இதன்போது படுகாயமடைந்தவரின் தம்பிக்கும், வாள்வெட்டுக் குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
logoblog

#hashtag

Thanks for reading மட்டக்களப்பில் வாள்வெட்டு தாக்குதல்; ஒருவர் படுகாயம்

No comments:
Previous
« Prev Post