Monday, March 19, 2018

கொழும்பு மாநகர சபையின் முதலாவது பெண் மேயர் இன்று பதவிப்பிரமாணம்!!

  Editor       Monday, March 19, 2018

கொழும்பு மாநகர முதல்வராக ரோசி சேனாநாயக்க இன்று மாலை பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளார்.

அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று மாலை 6 மணிக்கு அவர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.கொழும்பு மாநகர முதல்வராக பதவியேற்கும் முதல் பெண் என்ற பெருமை ரோசி சேனாநாயக்கவுக்கு கிடைத்துள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் கொழும்பு மாநகர சபைக்கு தெரிவான உறுப்பினர்களும், பிரதமர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி கொழும்பு மாநகர சபையின் 60 வட்டாரங்களில் வெற்றி பெற்றது.ஐக்கிய தேசியக்கட்சி பெற்ற ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 353 வாக்குகளுக்கு அமைய மேலதிகமாக 9 ஆசனங்கள் ஐக்கிய தேசியக்கட்சிக்கு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
logoblog

#hashtag

Thanks for reading கொழும்பு மாநகர சபையின் முதலாவது பெண் மேயர் இன்று பதவிப்பிரமாணம்!!

No comments:
Previous
« Prev Post