Monday, March 19, 2018

புத்தளத்தில் பதற்றம்; ஒருவர் மீது தாக்குதல்; பொலிசார் குவிப்பு!

  Editor       Monday, March 19, 2018
புத்தளம் பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து பாதுகாப்பிற்காக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று 77 வயதுடைய நபர் மீது குடிபோதையில் இருந்த நபரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக குறித்த பகுதியில் பதற்றம் நிலவியது


மாதம்பே – தனியவல்லப கிராமத்தை சேர்ந்த குருப்புஆராச்சிகே சோமபால என்பவர் இந்த தாக்குதலில் காயமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த நபர் மாதம்பே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தாக்குதல் மேற்கொண்டவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இருப்பினும் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதையடுத்து பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக பொலிஸாரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.
logoblog

#hashtag

Thanks for reading புத்தளத்தில் பதற்றம்; ஒருவர் மீது தாக்குதல்; பொலிசார் குவிப்பு!

No comments:
Previous
« Prev Post