Tuesday, March 20, 2018

உங்கள் வீட்டில் செல்வம் பெருக இந்தச் செடியை இப்படி வளருங்கள்………..

  Editor       Tuesday, March 20, 2018

மணி பிளாண்ட் செடியை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும். கடன் தொல்லை தீரும் என்ற நம்பிக்கை நமது மக்களின் மத்தியில் இருந்து வருகிறது. இதை வீட்டில் வளர்த்தாலே பணம் பெருகும் என சிலர் நினைப்பது உண்டு. ஆனால், இந்த செடியை எப்படி வளர்க்க வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை.

மணி பிளான்ட் வீட்டில் வளர்க்க விரும்புவோர் அதை சரியான திசையில் வளர்க்க வேண்டும்.மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசை நோக்கி தான் வளர்க்க வேண்டும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தென்கிழக்கு திசையில் தான் அதிகம் நேர்மறையான ஆற்றல் கிடைக்கிறது என்பதால், இந்த திசையில் தான் மணி பிளான்ட் நன்கு வளரும் மற்றும் இதனால் செல்வம் பெருகும் யோகம் பெற முடியும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.தென்கிழக்கு திசை விநாயகருக்கு உகந்த திசையாகும். மற்றும் இது சுக்கிரனை பிரதிநிதித்துவம் செய்யும் திசை எனக் கூறப்படுகிறது. இதன் காரணங்களுக்காக தான் மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசையில் வைக்க சொல்லி கூறுகிறார்கள்.


தென்கிழக்கு திசையில் மணி பிளான்ட்டை வைப்பதால், விநாயகர் தீயதை நீக்குகிறார் என்றும், சுக்கிரன் செல்வம் பெருக செய்கிறார் என்ற நம்பிக்கை நிலவிகிறது என வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

எக்காரணம் கொண்டும் மணி பிளான்ட்டை வடகிழக்கு திசையில் வைக்க கூடாது. ஏனெனில், இது எதிர்வினையை அதிகரிக்கும் திசை என கூறுகிறார்கள்.வடகிழக்கு குருவின் திசையை பிரதிநிதித்துவம் செய்கிறது. சுக்ரனும், குருவும் எதிரிகளாக கருதப்படுகிறார்கள். இந்த திசையில் வைத்தால் நஷ்டம் ஏற்படும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
logoblog

#hashtag

Thanks for reading உங்கள் வீட்டில் செல்வம் பெருக இந்தச் செடியை இப்படி வளருங்கள்………..

No comments:
Previous
« Prev Post