Thursday, March 22, 2018

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் மரக்கறிகளை ஏற்றிவந்த வாகனத்துடன் வேறு ஒருவாகனம் மோதிவிட்டு தப்பித்து சென்றுள்ளனர்

  Editor       Thursday, March 22, 2018
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வட்டா வாகனம் ஒன்றில் மரக்கறிகளை ஏற்றிவந்த வாகனத்துடன் வேறு ஒருவாகனம் மோதிவிட்டு தப்பித்து சென்றுள்ளனர். 

இச் சம்பவத்தில் வட்டா வாகனத்தின் சாரதி விபத்தில் காயமடைந்துள்ளனர். இன்று காலை 7:30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காயமடைந்த நபர் எழாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய கனகரத்தினம் இரங்கநாதன் என்பவர் காயமடைந்தவராவார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


logoblog

#hashtag

Thanks for reading யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் மரக்கறிகளை ஏற்றிவந்த வாகனத்துடன் வேறு ஒருவாகனம் மோதிவிட்டு தப்பித்து சென்றுள்ளனர்

No comments:
Previous
« Prev Post