Tuesday, March 20, 2018

தலைநகர் கொழும்பில் ஏற்பட்ட விபரீதம்! நள்ளிரவில் வீதிக்கு வந்த மக்கள்!!

  Editor       Tuesday, March 20, 2018


கொழும்பு தெமட்டகொடைப் பிரதேசத்தில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக அதிகளவான பொதுமக்கள் நடுவீதிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தெமட்டகொடை மௌலானா தோட்டம் எனும் பிரதேசத்திலேயே குறித்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.இதன்போது அப்பிரதேசத்தில் இருந்த 09 வீடுகள் முற்றாக தீக்கிரையாகி சேதமடைந்துள்ளன. சொத்துக்களின் சேதங்கள் குறித்து இதுவரை மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவில்லை.

தீவிபத்தினை அடுத்து அப்பிரதேசத்தின் ஏனைய வீடுகளில் இருந்த பொதுமக்களும் அச்சம் காரணமாக நேற்றைய இரவை வீதியிலேயே கழித்துள்ளனர்.தீவிபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் சம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
logoblog

#hashtag

Thanks for reading தலைநகர் கொழும்பில் ஏற்பட்ட விபரீதம்! நள்ளிரவில் வீதிக்கு வந்த மக்கள்!!

No comments:
Previous
« Prev Post