Monday, March 19, 2018

இன்றைய ராசிபலன் 19-03-2018

  Editor       Monday, March 19, 2018
மேஷம்: தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனாலும், சக பணியாளர்களின் உதவியுடன் பணிகளை குறித்த நேரத்துக்குள் முடித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் ஏற்பட்டாலும், செலவுகளும் அதிகரிக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகக் கூடும்.

ரிஷபம்: தேவையான பணம் கைக்குக் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத வகையில் பணவரவுக்கும், புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டாகும். மாலையில் குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் ஏற்படும் ஒரு பிரச்னையை சமயோசிதமாகச் சமாளித்து, சக ஊழியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும்.

மிதுனம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையைக் கேட்டு நடப்பார்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சிலருக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரம் வழக்கம் போலவே காணப்படும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும்.

கடகம்: இன்றைக்கு வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கவேண்டாம். உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது அவசியம். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக் கூடும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு.

சிம்மம்: இன்று புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும், ஒருவழியாக சமாளித்துவிடுவீர்கள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் பிரச்னை ஏற்பட்டாலும், பெரிதுபடுத்தாமல் பொறுமையாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் சக பணியாளர்களின் பணிகளில் உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.

கன்னி: மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தேவையான பணம் கிடைக்கும். உறவினர்கள் சிலர் உங்கள் யோசனையைக் கேட்பார்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியும் ஆதாயமும் தருவதாக அமையும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரித்தாலும் சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனை சற்று சுமாராகத்தான் இருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும்.

துலாம்: மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பீர்கள். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் மத்தியில் மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்தில் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும் பணியாளர்கள் உங்கள் ஆலோச னையைக் கேட்டுச் செயல்படுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகரிப்பது மகிழ்ச்சி தரும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் உண்டாகும்.

விருச்சிகம்: பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். தாய்மாமன் வழியில் ஆதாயம் கிடைக்கும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். பணியாளர்களால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது எச்சரிக்கையாக இருக்கவும்.

தனுசு: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்கு தாயிடம் கேட்ட உதவி கிடைக்கும். தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும். ஒரு சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மகரம்: மனதில் உற்சாகம் அதிகரிக்கும். நீண்டநாளாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள். மாலையில் வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறக்கூடும்.அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதுடன், லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

கும்பம்: புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். திடீர் செலவுகளால் சிலருக்குக் கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகமாகத்தான் இருக்கும். சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவும்.

மீனம்: உற்சாகமான நாள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மாலையில் பள்ளி, கல்லூரிக்கால நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் பணிகளை முடிப்பதில் சக பணியாளர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் வாங்குவதையும் கொடுப்பதையும் தவிர்க்கவும்.


logoblog

#hashtag

Thanks for reading இன்றைய ராசிபலன் 19-03-2018

No comments:
Previous
« Prev Post