Thursday, February 1, 2018

வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

  Editor       Thursday, February 1, 2018

வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23இ24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் இம்முறை இலங்கையில் இருந்து
பத்தாயிரம் 6 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும், இம்முறை பிளாஸ்ரிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் இன்று (01) தெரிவித்தார்.

கச்சதீவு திருவிழாவுக்கான முன்னாயர்த்த கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரச அதிபர் தலைமையில்மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
கச்சதீவில் இம்முறை இலங்கையில் இருந்து 6 ஆயிரத்து 500 யாத்திரிகர்களும், இந்தியாவில் இருந்து 2 ஆயிரத்து 500 யாத்திரிகர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திருவிழாவுக்கான ஒழுங்ககளுக்குரிய பிரதான பொறுப்பை கடற்படையினர் ஏற்றுள்ளனர். அதே போன்று ஏனைய துறையினர் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன் படி தத்தமது சேவைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்கர்களின் நலன் கருதி நிரந்தர மலசல கூட வசதிகள் மற்றும் மேலதிகமாக தற்காலிக மலசல கூட வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகட்டுவன் வரையான பேருந்து சேவை அதிகாலை 4 மணியில் இருந்து நண்பகல் 1 மணிவரை நடைபெறும். அதே போன்று குறிகட்டுவனில் இருந்து கச்சதீவு வரை காலை 5.00 மணிக்கு ஆரம்பித்து 2 மணி வரை நடைபெறும். படகுச்சேவைக்கான ஒருவழி கட்டணமாக 300 ரூபாய் அறவிடப்படவுள்ளது. நெடுந்தீவில் இருந்து கச்சதீவுக்கு ஒரு வழி கட்டணமாக 225 ரூபாய் அறவிடப்படவுள்ளது.

அத்துடன் சேவையில் ஈடுபடும் படகுகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே சேவைக்கு அனுமதிக்கப்படவுள்ளது.பயணிகள்பாதுகாப்பு அங்கி அணுயவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இம்முறை பொலிஸ் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. 200 பொலிஸார் சேவையல் ஈடுபடவுள்ளனர். பயணிகள் படகு சேவை இடம்பெறும் போது கடற்படை ரோந்து நடவடிக்கைகள் நடைபெறும்.

எனவே, ஆலயத்திற்குச் செல்லும் யாத்திரிகர்கள் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாமென்றும் அறிவித்துள்ளார். திருப்பலி நிறைவடைந்த பின்னர், அந்த பகுதியில் சூழல் மாசடைவதனால் பக்தர்கள் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பொருட்களை தவிர்த்துக்கொள்ளுமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
logoblog

#hashtag

Thanks for reading வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

No comments:
Previous
« Prev Post