Friday, February 2, 2018

விரைவில் கைதாகின்றார் கோத்தபாய ராஜபக்ஷ?

  Editor       Friday, February 2, 2018
உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் நாடு திரும்பவுள்ள, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.



மகரவில் நேற்று நடந்த ஐதேகவின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அடுத்த அதிபர் தேர்தல் வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ச, கைது செய்யப்படும் அச்சத்தில் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

உக்ரேனிடம் மிக் போர் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்த நீதி விசாரணைகளில் அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதை அறிந்தே, கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவுக்குத் தப்பியோடியுள்ளார்.

அவர் வரும் 10ஆம் நாள் உள்ளூராட்சித் தேர்தல்கள் முடிந்த பின்னர், வரும் 12ஆம் நாள், நாடு திரும்பவுள்ளார்.அவரைக் கைது செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் கோத்தபாய ராஜபக்ச சிறைக்கு அனுப்பப்படுவார்.மிக் போர் விமானக் கொள்வனவின் மூலம் கிடைத்த நிதி, ஹொங்கொங் வங்கிகளில் ஐந்து இந்தியர்களின் பெயர்களில் வைப்பிலிடப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
logoblog

#hashtag

Thanks for reading விரைவில் கைதாகின்றார் கோத்தபாய ராஜபக்ஷ?

No comments:
Previous
« Prev Post