Thursday, January 25, 2018

யாழ். சர்வதேச வர்த்தக சந்தை நாளை ஆரம்பம்!

  Yarl       Thursday, January 25, 2018



யாழ்ப்பாணம் சர்வதே வர்த்தக சந்தை நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

யாழ் மாநகர சபை மைதானத்தில் 9ஆவது முறையாக நடைபெறவுள்ள இந்த வர்த்தக சந்தையில் இந்தியாவின் வர்த்தக தொழிற்துறையின் மன்றங்களை ஒன்றிணைத்த அசோக் சாம் அமைப்பிலுள்ள 75 நிறுவனங்கள் இம்முறை நேரடியாக கலந்து கொள்ளவுள்ளன.

இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் 300க்கு மேற்பட்ட விற்பனை நிலையங்கள் இதில் இடம்பெறவுள்ளதாக தெரிவித்தனர். மேலும் உள்ளுர் உற்பத்தி தயாரிப்புக்களுக்கு முக்கியத்துவம் வழங்கி இந்த கண்காட்சி ஏற்பாடு செய்ப்பட்டுள்ளதாக கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.

பாடசாலை சீருடையில் வரும் மாணவர்களுக்கு கண்காட்சி இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படும் என்று கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
logoblog

#hashtag

Thanks for reading யாழ். சர்வதேச வர்த்தக சந்தை நாளை ஆரம்பம்!

No comments:
Previous
« Prev Post