Friday, January 19, 2018

கிளிநொச்சியில் வாகன விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

  Yarl       Friday, January 19, 2018



கிளிநொச்சி முறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) உழவு இயந்திரம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் மூவர் தலைக்கவசம் அணியாமல் பயணித்துள்ள நிலையில், அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த ஏனைய இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், மோட்டார் சைக்கிளுடன் மோதிய உழவு இயந்திரம், சட்டவிரோதமாக மணலேற்றிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் உழவு இயந்திரத்தின் சாரதியை கைதுசெய்த கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










logoblog

#hashtag

Thanks for reading கிளிநொச்சியில் வாகன விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

No comments:
Previous
« Prev Post