Monday, January 22, 2018

தனிமையிலிருந்த மூதாட்டியை அடித்துகொலை

  Editor       Monday, January 22, 2018
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வயோதிபப் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனைக்கோட்டை, பொன்னையா வீதி, பிரதேசத்தில் தனிமையில் வசித்து வந்த 72 வயதுடைய ஜெகநாதன் சத்தியபாமா எனும் வயோதிபப் பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிற்கு உதவி புரியும் உறவினர் ஒருவர் வீட்டினுள் சென்று பார்த்தபோது மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டு குறித்த பெண் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உயிரிழந்த பெண் அணிந்திருந்த நகைகள் காணாமல் போயுள்ள நிலையில் குறித்த பெண் நகை மற்றும் பணத்திற்காகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிப்பதாக மானிப்பாய் பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.










logoblog

#hashtag

Thanks for reading தனிமையிலிருந்த மூதாட்டியை அடித்துகொலை

No comments:
Previous
« Prev Post