Saturday, January 27, 2018

தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய திருவிழா கொடியேற்ற நிகழ்வு

  Yarl       Saturday, January 27, 2018



மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை ரமேஸ் கிறிஸ்டி தலைமையில் (26) மாலை விசேட ஆசிர்வாதத்துடன் திருவிழா கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.

திருவிழா கொடியேற்ற நிகழ்வினை தொடர்ந்து செபமாலை ,பிராத்தனை ஒப்புகொடுக்கப்பட்டு முதல்நாள் நவநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது .
திருவிழா நவநாள் காலங்களில் ஆலயத்தில் தினமும் மாலை 05.30 மணிக்கு ஜெபமாலை பிராத்தனைகள் இடம்பெற்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும் .

எதிர்வரும் சனிக்கிழமை 3ஆம் திகதி மாலை 05.30 மணிக்கு தூய காணிக்கை அன்னையின் திருச்சொரூப பவனி அதனை தொடர்ந்து விசேட நற்கருணை வழிபாடும் ,நற்கருணை ஆசீரும் இடம்பெறும் .

04.02.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணிக்கு மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் தலைமையில் விசேட திருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.






















































logoblog

#hashtag

Thanks for reading தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய திருவிழா கொடியேற்ற நிகழ்வு

No comments:
Previous
« Prev Post