Friday, January 19, 2018

யாழில் கொடூரம் – மூன்று வயதுடைய பெறாமகளை வெட்டிக்கொன்ற கொடூரன் நஞ்சருந்தி தற்கொலை!

  Yarl       Friday, January 19, 2018



யாழ்ப்பாணத்தில் மூன்று வயதுடைய தனது பெறாமகளை வெட்டிக்கொன்றதோடு தனது தாயாரையும் வெட்டி படுகாயமடையச் செய்த கொடூரன் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளார்.

இச்சக் கொடூரம் யாழ் வண்ணார் பண்ணை வட மேற்கு பத்திரகாளி அம்மன் கோவில் வீதியில் இன்று(19) காலை இடம்பெற்றது.

இச்சம்பவத்தில் 3 வயதுடைய நித்தியா என்ற சிறுமி உயிரிழந்ததுடன், சிறுமியின் பாட்டி படுகாயங்களுக்குள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை வாள்வெட்டை மேற்கொண்ட, உயிரிழந்த சிறுமியின் சித்தப்பாவான 33 வயதுடைய குணரத்தினம் ஈஸ்வரன் என்பவரும் விசமருந்தி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

இன்று காலை குறித்த வீட்டில் தாயும் அவருடைய இளைய மகனுடைய மகளும் இருந்துள்ளனர். அப்போது அவருடைய மூத்த மகன் ஈஸ்வர் என்பவர் வீட்டில் இருந்த தாய் மற்றும் பெண் குழந்தை மீது கொடூரமாக கோடாரியால் வெட்டி தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்துள்ளதுடன் தாய் கழுத்து மற்றும் தலையில் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
மேலும் குறித்த தாக்குதலை மேற்கொண்ட ஈஸ்வர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்
இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.














logoblog

#hashtag

Thanks for reading யாழில் கொடூரம் – மூன்று வயதுடைய பெறாமகளை வெட்டிக்கொன்ற கொடூரன் நஞ்சருந்தி தற்கொலை!

No comments:
Previous
« Prev Post