Saturday, January 27, 2018

மனைவியை சமைத்து சாப்பிட்ட கணவர்

  Editor       Saturday, January 27, 2018

மெக்சிகோவில் டேக்சோ என்ற இடத்தில் தனது மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்து அவரை சமைத்து சாப்பிட்ட கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த மாநிலத்தையே அதிர வைத்துள்ளது. டேக்சோ பகுதியைச் சேர்ந்தவர் மேக்டலினா என்ற பெண் தனது முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுப்பட்டால் பிரிந்து தற்போது இரண்டாவது கணவனுடன் வாழ்ந்து வருகிறார்.

மேக்டலினாக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இரு குழந்தைகளும் முதல் கணவரின் பராமரிப்பில் வளர்த்து வருகிறார். இதனையடுத்து கடந்த வாரம் தனது குழந்தைகளைப் பார்ப்பதற்காக மேக்டலினா தனது முதல் கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது இரண்டாவது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் மேக்டலினாவின் முதல் கணவர் வீட்டுக்கு சென்று போலீசார் சோதனை நடத்தி உள்ளனர். அப்போது அங்கு அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் அவரது உடல் பாகங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருப்பதைக் போலீசார் கண்டுபிடித்தனர்.

மேக்டலினாவை கொடூரமாக கொலை செய்துவிட்டு உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்ட முதல் கணவர் தற்போது தலைமறைவான உள்ளார். மேக்டலினாவின் முதல் கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
logoblog

#hashtag

Thanks for reading மனைவியை சமைத்து சாப்பிட்ட கணவர்

No comments:
Previous
« Prev Post