Saturday, January 27, 2018

சென்னையில் முக்கிய சந்திப்பை மேற்கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்க அமைச்சர்!

  Editor       Saturday, January 27, 2018

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஐயாத்துரை அவர்கள் முக்கிய சந்திப்புக்களை தமிழகத்தில் மேற்கொண்டுள்ளார். 

இதன்னொரு அங்கமாக சென்னையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆதரவாளர்களுடன் சந்திப்பொன்று சனவரி 20ம் நாளன்று இடம்பெற்றிருந்தது.
திராவிடர்விடுதலைக் கழகத்தின் தலைமையகத்தில் இடம்பெற்றிருந்த



இச்சந்திப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழக பிரதிநிதிகளான தமிழினியன், முகேஷ், தோழமை மையத்தலைவி பேராசிரியர் சரசுவதி பேராசிரியர் சங்கரலிங்கம், மூத்த ஊடகவியலாளர்கள் டி,எஸ்.எஸ் மணி. எட்வின், வழக்கறிஞர் பாவேந்தன், தமிழர் வணிகர்களம் தலைவர் மேகநாதன் உள்ளிட்ட பல அமைப்பு பிரதிநிதிகள், தோழர்கள் பங்கெடுத்துள்ளனர். 

கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழீழ விடுதலைக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பங்களிப்பு மற்றும் இந்திய அரசை அணுகுதல் குறித்து விவாதித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

logoblog

#hashtag

Thanks for reading சென்னையில் முக்கிய சந்திப்பை மேற்கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்க அமைச்சர்!

No comments:
Previous
« Prev Post