Monday, January 22, 2018

கிளிநொச்சி, வவுனியாவில் இன்று மின்தடை!

  Yarl       Monday, January 22, 2018

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டத்தின் பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை(23) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம், நாளை செவ்வாய்க்கிழமை(23) காலை- 09 மணி தொடக்கம் மாலை-05 மணி வரை கிளிநொச்சி மாவட்டத்தின் உருத்திரபுரம், ஜெயந்திநகர் ஆகிய பகுதிகளிலும்,

காலை-08 மணி தொடக்கம் மாலை-05.30 மணி வரை வவுனியா மாவட்டத்தின் கோவில்குளம், ஆச்சிபுரம், சமணன் குளம், மகாமயிலங்குளம், மருதநகர், எல்லப்ப மருதங்குளம், பெரிய கூமரசங்குளம், ஆசிக்குளம், சிதம்பரபுரம், சாந்தசோலை கிராமம், கொக்கிளிய, அக்போபுர, மதவுவைத்த குளம், தவசிக்குளம், குட்செட் றோட், தோணிக்கல், பண்டாரிக்குளம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
logoblog

#hashtag

Thanks for reading கிளிநொச்சி, வவுனியாவில் இன்று மின்தடை!

No comments:
Previous
« Prev Post