Friday, January 19, 2018

முச்சக்கரவண்டி மின் கம்பத்தில் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

  Yarl       Friday, January 19, 2018



மட்டக்களப்பு பாசிக்குடா பிரதான வீதியில் முச்சக்கரவண்டியொன்று மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர் படுகாயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற இவ்விபத்தில் கல்குடாவைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான மு.சூரியகுமார் (வயது-37) என்பவரே உயிரிழந்துள்ளார்.

பாசிக்குடா கடற்கரையில் நண்பருடன் நீராடிவிட்டு முச்சக்கரவண்டியில் தமது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்திற்கு காரணமென தெரிவிக்கும் கல்குடா பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






logoblog

#hashtag

Thanks for reading முச்சக்கரவண்டி மின் கம்பத்தில் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

No comments:
Previous
« Prev Post