Tuesday, January 30, 2018

உலகின் குள்ளமான பெண்ணும் உயரமான ஆணும் சந்திப்பு

  Editor       Tuesday, January 30, 2018
எகிப்து நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த உலகின் மிகவும் குள்ளமான பெண்ணும், மிக உயரமான ஆணும் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசி மகிழ்ந்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உலகின் மிகவும் குள்ளமான பெண் என்ற கின்னஸ் சாதனை படைத்த இந்தியாவின் நாக்பூர் பகுதியைச் சேர்ந்த ஜோதி. 25 வயதாகும் இந்த பெண்ணின் மொத்த உயரமே 2 அடி 6 அங்குலம் தான். இதே போல் உலகின் உயரமான மனிதன் என்ற கின்னஸ் சாதனையை படைத்தவர் துருக்கியை சேர்ந்தவர் சுல்தான் கோசென். 36 வயதாகும் இவரின் உயரம் 8 அடி 9 அங்குலம்.

எகிப்து அரசு தனது சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக உலகின் மிகவும் குள்ளமான பெண்ணுக்கும், மிக உயரமான ஆணுக்கும் அழைப்பு விடுத்திருந்தது. எகிப்து நாட்டின் அழைப்பை ஏற்ற இருவரும் துருக்கியில் சந்தித்து பேசி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இருவரும் சந்திக்கும் புகைப்படத்தை துருக்கி அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
logoblog

#hashtag

Thanks for reading உலகின் குள்ளமான பெண்ணும் உயரமான ஆணும் சந்திப்பு

No comments:
Previous
« Prev Post