Monday, January 15, 2018

யாழில் வாள்வெட்டுக் கும்பல்களின் அடாவடிகள் மீள ஆரம்பம்!

  Yarl       Monday, January 15, 2018



யாழ்ப்பாணத்தில் இருவேறு பகுதிகளில் இன்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

யாழ். ஆனைக்கோட்டை வராகி அம்மன் கோவில் அருகில் மற்றும் யாழ்ப்பாணம் பூநாரி மடம் பகுதி ஆகிய இடங்களிலேயே இன்று இரவு இந்த வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த வாள்வெட்டுச் சம்பவங்களில் கந்தையா திருநீலகண்டசிவம் (வயது 49) மற்றும் நாகமணி ஜெனிஸ்ரன் (வயது 24) ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக, மானிப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
logoblog

#hashtag

Thanks for reading யாழில் வாள்வெட்டுக் கும்பல்களின் அடாவடிகள் மீள ஆரம்பம்!

No comments:
Previous
« Prev Post