Tuesday, January 30, 2018

ஸ்கேன் இயந்திரத்தின் காந்தப்புலத்தால் திடீரென ஈர்க்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த நபர்!

  Editor       Tuesday, January 30, 2018
இந்தியா – மும்பை வைத்தியசாலையொன்றில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க நோயாளியுடன் சென்ற நபர் ஒருவர் ஸ்கேன் இயந்திரத்தின் காந்தப்புலத்தால் ஈர்க்கப்பட்டு சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் 
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மும்பையைச் சேர்ந்த ராஜேஷ் மாரு என்பவர் விற்பனை விநியோகஸ்த்தராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வயதான உறவினர் ஒருவரை தனியார் வைத்தியசாலைக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க அழைத்துச் சென்றுள்ளார்.ராஜேஷ் அழைத்துச் சென்ற பெண்ணுக்கு சுவாசக் கேளாறு இருந்ததால் ராஜேஷ் ஒக்சிஜன் சிலிண்டர் ஒன்றை உடன் எடுத்துச் சென்றுள்ளார்.

எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கும் அறைக்குள் ராஜேஷ் ஒக்சிஜன் சிலிண்டருடன் சென்றுள்ளார். பணியில் இருந்த வைத்தியர் மற்றும் ஸ்கேன் அறைக்கு வெளியே இருந்த ஊழியரும் ஒக்சிஜன் சிலிண்டருடன் உள்ளே செல்ல அனுமதித்ததாக கூறப்படுகிறது.ஸ்கேன் அரைக்குள் சென்ற ராஜேஷ் இயந்திரத்தின் சக்தி வாய்ந்த காந்தபுலத்தால் ஈர்க்கப்பட்டு இயந்திரத்தில் வேகமாக மோதியதில் உயிரிழந்துள்ளார்.

ராஜேஷ் உயிரிழப்புக்கு வைத்தியசாலை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.இதையடுத்து, ராஜேஷின் உறவினர்கள் அளித்த முறைப்பாட்டிற்கமைய ஸ்கேன் அறையிலிருந்த ஊழியர்கள் வைத்தியர் உட்பட மூவரை மும்பை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
logoblog

#hashtag

Thanks for reading ஸ்கேன் இயந்திரத்தின் காந்தப்புலத்தால் திடீரென ஈர்க்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த நபர்!

No comments:
Previous
« Prev Post