Tuesday, January 23, 2018

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு விளக்கமறியல்!

  Yarl       Tuesday, January 23, 2018



யாழ்.பல்கலைகழக முகாமைத்துவபீட மூன்றாம் வருட மாணவர்கள் நால்வரை எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாரால் நேற்று (திங்கட்கிழமை) நீதிவான் நீதிமன்றில் இந்த நான்கு மாணவர்களும் முறைப்படுத்தப்பட்டனர்.

கடந்த வியாழக்கிழமை இரவு முகாமைத்துவ பீட நான்காம் ஆம் வருட மற்றும் மூன்றாம் ஆம் வருட மாணவர்களக்கு இடையில் யாழ்.பல்கலைகழக வளாகத்திலும் மற்றும் பரமேஸ்வர சந்தியிலும் இடம்பெற்ற மோதல் காரணமாகவே இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவர்களுக்கான பிணை விண்ணப்பத்தினை நிராகரித்த நீதிவான் நான்கு மாணவர்களையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்கமாறு உத்தரவிட்டார்.
logoblog

#hashtag

Thanks for reading யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு விளக்கமறியல்!

No comments:
Previous
« Prev Post