Friday, January 26, 2018

புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய அதிபர் பொறுப்பை ஏற்றுகொண்டார்.

  Editor       Friday, January 26, 2018

புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய அதிபர் அருட்திரு திருமகன் பணி பொறுப்பை ஏற்றுகொண்டார்.

புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய அதிபராக அருட்திரு திருமகன் அடிகளார் இன்று காலை ஆயர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுத்து பணி பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந் நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் புனித பத்திரிசியார் கல்லூரியின் மாணவர்கள் ஆசிரியர்கள் மறைமாவட்ட குருக்கள் பழைய மாணவர்கள் என பலரும் பங்குபற்றினார்கள். காலை 9 மணிக்கு புனித மரியன்னை பேராலயத்தில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஆயர் மேதகு கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் தலைமையில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு திருப்பலி நிறைவில் புதிய அதிபருக்கான பணி பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.




திருப்பலியின் முடிவில் புதிய அதிபர் பாடசாலை பான்ட் வாத்திய அணிவகுப்போடு பாடசாலைக்கு அழைத்துவரப்பட்டு , பாடசாலை கொடி ஏற்றப்பட்டது. பின்னர் யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் அடிகளாரால் புதிய அதிபர், பாடசாலை அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டு அதிகார பூர்வமாக அதிபருக்குரிய நாற்காலியில் உட்காரவைகப்பட்டு பணி பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டது.

logoblog

#hashtag

Thanks for reading புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய அதிபர் பொறுப்பை ஏற்றுகொண்டார்.

No comments:
Previous
« Prev Post