Tuesday, January 30, 2018

ஆயுதங்கள் மீட்பு: புளொட் முன்னாள் உறுப்பினரின் கட்டுக்காவல் நீடிப்பு

  Editor       Tuesday, January 30, 2018
ஆபத்தை விளைவிக்கும் ஆயதங்களை சட்டவிரோதமாக பதுக்கிவைத்திருந்த குற்றச்சாட்டு வழக்கின் சந்தேகநபரான புளொட்டின் முன்னாள் உறுப்பினரின் விளக்கமறியலை பெப்ரவரி 12ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று நீடித்தது.


புளொட்டின் முன்னாள் உறுப்பினர் மானிப்பாயைச் சேரந்த சிவகுமார் (வயது 55) என்பவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்தார். அவரது வீட்டின் அலுமாரி ஒன்றுக்குள் துப்பாக்கிகள் காணப்பட்டன.
பயன்படுத்தத்தக்க ஏகே47 துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தப்படும் கோல்ட்ஸர் 2, ரவைகள் 396, கைத்துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தும் மகஸின்கள் 3, வோக்கிகள் 2 மற்றும் 2 வாள்கள் மீட்கப்பட்டன.
அதனையடுத்து புளொட்டின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கட்டளையில் இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சந்தேகநபர் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரணை செய்த நீதிவான், சந்தேகநபரின் விளக்கமறியலை பெப்ரவரி 12ஆம் உத்தரவிட்டார்.
logoblog

#hashtag

Thanks for reading ஆயுதங்கள் மீட்பு: புளொட் முன்னாள் உறுப்பினரின் கட்டுக்காவல் நீடிப்பு

No comments:
Previous
« Prev Post